ராயல்டி வேண்டும்! சினிமா பாடகர்கள் கோரிக்கை!

ராயல்டி வேண்டும்!  சினிமா பாடகர்கள் கோரிக்கை!

செய்திகள் 20-Aug-2013 11:19 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்திய பாடகர்கள் உரிமை சங்கத்தின் (இந்தியன் சிங்கர் ரைட்ஸ் அசோசியேஷன்) ஆலோசனை கூட்டம் நேற்று சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு பிறகு பின்னணி பாடகர்கள் கே.ஜே.யேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியம். ஹரிஹரன், பி.சுசீலா, வாணி ஜெயராம் மற்றும் பலர் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:

பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகர்களான ஜாவித் அக்தர், சோனி நிகம் ஆகியோர் பல ஆண்டுகள் நடத்திய தொடர் போராட்டத்துக்கு பிறகு 2012, ஜூன் மாதம் பாடகர்களுக்கான காப்புரிமை சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி 1963 ஆம் ஆண்டுக்கு பிறகு வெளிவந்த எல்லா பாடல்களுக்கும் 2012 செப்டம்பர் மாதம் 5-ஆம் தேதி முதல் ராயல்டி வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது. ஆனால் இன்றுவரை அதை செயல்படுத்தவில்லை.

நாங்கள் யாரையும் எதிர்த்து போராடவில்லை. எங்களுக்கான உரிமையை மட்டுமே கேட்கிறோம். நாங்கள் ராயல்டி கேட்பதால் இசை அமைப்பாளருக்கோ, தயரிப்பாளருக்கோ எந்த பாதிப்பும் இல்லை. அவர்களுக்கு சேர வேண்டியதிலிருந்து நாங்கள் எதையும் கேட்கவில்லை. எங்களுக்கு தனியாக பெற்று தாருங்கள் என்று தான் கேட்கிறோம். தொலைக்காட்சி, வானொலி, செல்ஃபோன் உள்ளிட்ட பல வழிகளில் கமர்ஷியலாக ஒலிபரப்பாகும் பாடல்களுக்கு மிகக் குறைந்த ராயல்டியே கேட்கிறோம். இந்த கோரிக்கையை அரசு ஏற்றுக் கொண்டு சட்டம் இயற்றியதை தான் நாங்கள் வேண்டுகோளாக வைக்கிறோம்’’ என்றனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

24 - நான் உன் பாடல் ப்ரோமோ


;