அதிக வசூலை குவித்த 10 இந்திய படங்கள்!

அதிக வசூலை குவித்த 10 இந்திய படங்கள்!

செய்திகள் 19-Aug-2013 6:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இதுவரை வெளியான அனைத்து இந்திய மொழிப் படங்களில் அதிக வசூலை குவித்த படங்களின் ஒரு பட்டியலை வரிசைப்படி வெளியிட்டுள்ளது ஒரு முன்னணி இணையதளம். அதில் என்ன ஒரு விசேஷம் என்றால் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ள படங்கள் அனைத்தும் ஹிந்தி மற்றும் தமிழில் உருவாகிய படங்களே என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் முதல் 10 இடங்களில் இருக்கும் படங்கள் எவை, அவை அள்ளிய வசூல் எவ்வளவு என்பதை இங்கு பட்டியலிட்டிருக்கிறோம்.

1. 3 இடியட்ஸ் – 385 கோடி
2. ஏக் தா டைகர் – 310 கோடி
3. யே ஜவானி ஹை தீவானி – 270 கோடி
4. எந்திரன் – 255 கோடி
5. தபாங் 2 – 251 கோடி
6. ரா ஒன் – 240 கோடி
7. சிங்கம் 2 – 230 கோடி
8. டான் 2 – 230 கோடி
9. தபாங் – 215 கோடி
10. ஜப் தக் ஹை ஜான் 211 கோடி

இந்தப் படங்களின் பட்டியலில் ஷாருக்கான் நடித்து சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படமும் விரைவில் இடம் பிடிக்கலாம். அது மட்டுமல்லாமல் இந்தப் பட்டியலில் ஏழாவது இடத்தில் இருக்கும் தமிழ் படமான ‘சிங்கம் 2’ இன்னும் உலகம் முழுக்க வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;