முதல்வருக்கு நடிகர் விஜய் நன்றி!

முதல்வருக்கு நடிகர் விஜய் நன்றி!

செய்திகள் 19-Aug-2013 2:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில், விஜய் - அமலா பால் ஜோடியாக நடித்து, ஸ்ரீமிஸ்ரி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்த படம் ‘தலைவா’. தமிழகம் தவிர உலகம் முழுக்க சென்ற 9-ஆம் தேதி வெளியான இப்படம், ஒரு சில பிரச்சனைகள் காரணமாக தமிழகத்தில் கடந்த 9-ஆம் தேதி ரிலீசாகவில்லை. இந்நிலையில் ’தலைவா’ படம் நாளை தமிழகம் முழுக்க வெளியாகிறது. இது குறித்து நடிகர் விஜய் தமிழக முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

‘’கடந்த ஆகஸ்ட் 9 - ஆம் தேதி வெளிவரவேண்டிய ‘தலைவா’ படம் சில அச்சுறுத்தல் காரணமாக தியேட்டர்களில் திரையிட முடியவில்லை. இது, கடந்த பத்து தினங்களாக நான், தயாரிப்பாளர், வினியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்கள், ரசிகர்கள் அனைவருக்கும் மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. மீடியாக்களில் வந்த பல கட்டுக் கதைகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் இந்த பிரச்சனையில் தலையிட்டு ‘தலைவா’ திரைப்படம் சுமுகமாக வெளிவர, நடவடிக்கை எடுத்துள்ளார்கள். பல வேலைகளுக்கு நடுவிலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கண்ட முதல்வர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னோடு பொறுமை காத்த அத்தனை ரசிகர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நன்றி தெரிவிப்பதோடு ‘தலைவா’ படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் கண்டு ரசிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்’’ என்று அந்த அறிக்கையில் விஜய் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;