கோடி ரசிகர்களை விரும்ப வைத்த பாடகி!

கோடி ரசிகர்களை விரும்ப வைத்த பாடகி!

செய்திகள் 19-Aug-2013 11:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஃபேஸ்புக்கில் எவ்வளவு ரசிகர்கள் தங்களை ‘லைக்’ பண்ணியிருக்கிறார்கள், ட்விட்டரில் எத்தனை ரசிகர்கள் தங்களைப் பின் தொடர்கிறார்கள் என்பதுகூட இப்போதெல்லாம் ஒரு ஸ்டேட்டஸாகவே மாறிவிட்டது. ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட 8க்கும் மேற்பட்ட மொழிகளில் பின்னணிப் பாடகியாக வலம் வந்து கொண்டிருக்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் ஃபேஸ்புக்கிலும், ட்விட்டரிலும் ரொம்பவே பிரபலம்.

ஸ்ரேயா நல்ல பாடகியாக மட்டுமல்லாமல், ஹீரோயின் போல அழகாகவும் இருப்பதால் அவரை தங்களின் ‘கனவுக்கன்னி’யாக நினைத்து வரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. 2008 ஏப்ரலில் ஃபேஸ்புக்கில் தனது கணக்கைத் துவக்கிய ஸ்ரேயா கோஷலின் ஃபேஸ்புக் பக்கத்தை தற்போது 1 கோடி பேர் ‘லைக்’கி இருக்கிறார்கள் என்பது இந்திய அளவில் ஒரு பெண் பிரபலத்தின் சாதனையாகப் பார்க்கப்படுகிறது. ட்விட்டரிலும் இவரை கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;