பெரியார் தாசன் காலமானார்!

பெரியார் தாசன் காலமானார்!

செய்திகள் 19-Aug-2013 10:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகரும், சென்னை பச்சையப்பன் கல்லூரி பேராசிரியரும், பெரியாரின் மீது பற்றுக்கொண்டவருமான பெரியார் தாசன் காலமானார். அவருக்கு வயது 63. உடல்நலம் சரியில்லாமல் சென்னையிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெரியார் தாசன், இன்று காலை மரணமடைந்தார். இவர், ‘அழகி’, ‘தென்றல்’, ‘காதலர் தினம்’ என ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவரது நடிப்பில் பெயர் சொல்லும் படமாக அமைந்தது பாராதிராஜா இயக்கிய ‘கருத்தம்மா’ படம்தான்.

சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறிய பெரியார் தாசன், தனது உடலை மருத்துவ கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்கு தானமாக வழங்க விருப்பம் தெரிவித்திருந்தார். எனவே, அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் இல்லை. நாளை காலை அவரது உடல் அவரது விருப்பபடி மருத்துவ கல்லூரிக்கு வழங்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;