பரத்துக்கு காதல் கல்யாணம்!

பரத்துக்கு காதல் கல்யாணம்!

செய்திகள் 19-Aug-2013 10:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் பரத். இவர் இதுவரை 23 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் ‘ஐந்து ஐந்து ஐந்து’ படத்தில் வித்தியாசமான் தோற்றத்தில் நடித்து அவைவரின் பாராட்டை பெற்ற பரத்துக்கும் துபாயை சேர்ந்த ஜோஸ்வா – ஜெஸ்ஸி ஆகியோரின் மகளான டாக்டர் ஜெஸ்லிக்கும் (பல் மருத்துவர்) திருமணம் நடைபெறவிருக்கிறது.

இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு, திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர். இந்தத் திருமணம் பரத்தின் பெற்றோர் ஸ்ரீனிவாசன், பாக்யலட்சுமி மற்றும் ஜெஸ்லியின் பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் பதிவு திருமணமாக நடைபெறவுள்ளது. இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சி வருகிற செப்டம்பர் 14-ஆம் தேதி மாலை சென்னையில் நடைபெறவுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

குரங்கு பொம்மை - ட்ரைலர்


;