விக்ரம் - தரணி இணையும் ராஸ்கல்!

விக்ரம் - தரணி இணையும் ராஸ்கல்!

செய்திகள் 19-Aug-2013 11:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் விக்ரமின் நடிப்பு வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய படம் பாலா இயக்கிய ‘சேது’. இந்தப் படத்திற்கு பிறகு பல படங்களில் விக்ரம் நடித்தாலும், தொடர் வெற்றியாக அமைந்த படங்கள் தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த, ‘தில்’ மற்றும் ‘தூள்’ ஆகிவையாகும்! இந்தப் படங்களுக்குப் பிறகு இயக்குனர் தரணி - விக்ரம் இடையே ஒரு பெரிய இடைவெளி ஏற்பட, இப்போது மீண்டும் இருவரும் இணைந்து ஒரு படத்தை கொடுக்க முடிவெடுத்திருக்கிறார்கள். விக்ரம் தற்போது ஷங்கர் இயக்கி வரும் ‘ஐ’ படத்தில் பிசியாகி நடித்துக் கொண்டிருக்கிறார்.

எனவே இந்தப் படம் முடிவடைந்ததும், தரணி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘ராஸ்கல்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க இருக்கும் கதாநாயகி, மற்ற நடிகர் - நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் தேர்வு தற்போது நடந்து வருகிறது. இந்தப் படத்தை ‘ஐங்கரன் இன்டர்நேஷனல்’ நிறுவனம் மிகப் பிரம்மாண்டமாக தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

துருவ நட்சத்திரம் - டீசர் 2


;