விஜய்யின் அதிரடி சண்டை

விஜய்யின் அதிரடி சண்டை

செய்திகள் 17-Aug-2013 1:29 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யின் ‘தலைவா’ பட பிரச்சனை ஒரு பக்கம் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில், இன்னொரு பக்கம் விஜய் நடிக்கும் ‘ஜில்லா’ படத்தின் படப்பிடிப்பு ஜரூராக நடந்து வருகிறது. ‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், நேசன் இயக்கி வரும் இப்படத்தில் விஜய்யுடன், கேரள சூப்பர் ஸ்டார் மோகன் லால், பூர்ணிமா ஜெயராம் காஜல் அகர்வால் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றனர். இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ள நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னை, மீனம்பாக்கத்திலுள்ள பின்னி மில்லில் நடந்து வருகிறது. இங்கு வில்லன்களுடன் விஜய் ஆக்ரோஷமாக மோதும் அதிரடி சண்டை காட்சிகளை படமாக்கி வருகிறார்கள். ’ஜில்லா’ வருகிற பொங்கல் விருந்தாக திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;