ரிலீஸ் களத்தில் இருக்கும் படங்கள்!

ரிலீஸ் களத்தில் இருக்கும் படங்கள்!

செய்திகள் 17-Aug-2013 1:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யின் ‘தலைவா ’படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்று இன்னும் தெரியவில்லை. இந்த நிலையில் 'தலைவா' படம் ரிலீசாக இருந்த 9-ஆம் தேதி வெளியான ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஹிந்தி திரைப்படம் உலகம் முழுக்க வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருப்பதோடு, தமிழகத்திலும் படம் வசூலில் கல்லாகட்டிக் கொண்டிருக்கிறது. ’தலைவா’ படம் வெளியாகாத நிலையில், அந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு வெளியான பரத்தின் ‘ஐந்து ஐந்து ஐந்து’ திரைப்படமும் ரசிகர்களிடையே பரவலாக வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.

‘தலைவா’வுடன் போட்டி போட வந்த, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘ஐந்து ஐந்து ஐந்து’ ஆகிய படங்கள் ரிலீஸாகி ஒரு வார காலமான நிலையில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ‘ஆதலால் காதல் செய்வீர்’ படமும் சமீபத்தில் ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. இந்தப் படங்களை தொடர்ந்து இந்த மாதம் இன்னும் ஒரு சில படங்கள் வரிசையாக ரிலீசாகவிருக்கின்றன. அதில் எழில் இயக்கியிருக்கும் ‘தேசிங்குராஜா’, பத்மாமகன்’ இயக்கியுள்ள ‘நேற்று இன்று’, ‘கற்றது தமிழ்’ ராம் இயக்கியிருக்கும் ‘தங்கமீன்கள்’, ஏ.சி.துரை இயக்கியிருக்கும் ‘பொன்மாலை பொழுது’ ஆகிய படங்கள் குறிப்பிடத்தக்கது. இந்த படங்களில் எந்தெந்த படங்கள் ரசிகர்களிடையே வரவேற்பு பெறும் என்பது இன்னும் ஒரு சில தினங்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;