பெப்சி அதிரடி முடிவில் மாற்றம்!

பெப்சி அதிரடி முடிவில் மாற்றம்!

செய்திகள் 17-Aug-2013 12:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு சில மாதங்களாக பெப்சி அமைப்பினருக்கும், அதில் அங்கம் வகிக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் இடையில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்பட்டு சங்கம் சுமுகமான முறையில் செயல்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று, ‘’சின்னத்திரை பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும்’’ என்று பெப்சி அமைப்பு அறிவித்துள்ளது. இது குறித்து பெப்சி தலைவர் அமீர், பொதுச் செயலாளர் சிவா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

‘’சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கத்துடன் சம்பள பேச்சுவார்த்தை பல மாதங்களாக நடந்தது. அது முடியாததாலும், அவர்கள் தரப்பில் புதிய தொழிற்சங்கத்தை தொடங்க முற்பட்டதாலும் பெப்சி பொதுக்குழு கூடி, பெப்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவோருக்கு தொழில் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்க தலைவி ராதிகா, பெப்சிக்கு மாற்றாக புதிய தொழிலாளர் அமைப்பு தொடங்கும் எண்ணம் இல்லை என்று ஒப்புதல் கடிதம் அளித்துள்ளார்.

இது குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், இரு அமைப்புடனும் பேசி சம்பளம் உள்ளிட்ட பிரச்சனைகளை முடிப்பதாக உறுதியளித்துள்ளார். இதன் அடிப்படையில் சின்னத்திரை தொடர்பான அனைத்து பணிகளுக்கும் பெப்சி தொழில் ஒத்துழைப்பு அளிக்கும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தீவிரம் - டீசர்


;