’தலைவா’ பட குழுவினர் அதிரடி முடிவு!

’தலைவா’ பட குழுவினர் அதிரடி முடிவு!

செய்திகள் 16-Aug-2013 3:25 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழகம் தவிர, உலகமெங்கும் ‘தலைவா’ படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிற நிலையில் தமிழகத்தில் மட்டும் இந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது ‘தலைவா’ படக்குழுவினர்! இந்த நிலையில், நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்து, ‘’படத்தை உடனடியாக ரிலீஸ் செய்ய தமிழக முதல் அமைச்சர் உதவி செய்ய வேண்டும்’’ என்று கோரிக்கை வைத்திருந்தனர் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய்.

ஆனால் இப்போது திடீர் திருப்பமாக இந்தப் படக்குழுவினர் போலீஸ் கமிஷனரை சந்தித்து, ’’தலைவா’ படத்தை விரைவில் வெளியிட உதவக் கோரி ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரியுள்ளனர். போலீஸ் கமிஷனர் உண்ணாவிரதத்துக்கு அனுமதி அளித்தால் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர், படத்தில் நடித்திருக்கும் விஜய், அமலா பால், சத்யராஜ், சந்தானம் உட்பட படக்குழுவினர் அனைவரும் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;