கண்ணீர் சிந்திய ‘தலைவா’ தயாரிப்பாளர்!

கண்ணீர் சிந்திய ‘தலைவா’ தயாரிப்பாளர்!

செய்திகள் 16-Aug-2013 12:09 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கோலிவுட் மட்டுமல்லாமல் தற்போது தமிழகம் முழுக்க பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் பிரச்சனை ‘தலைவா’ படத்தின் ரிலீஸ்தான்! பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வந்த இந்தப் படத்தின் வேலைகள் முடிந்து பிரம்மாண்டமான முறையில் ஆடியோவும் வெளியாகி, படம் சென்ற 9ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீஸாக இருந்தது. ஆனால் ‘தலைவா’வுக்கு கண் திருஷ்டி பட்டது போலும்! ஆந்திரா, கேரளா, மும்பை, வெளிநாடுகள் என தமிழகம் தவிர எல்லா இடங்களிலும் ‘தலைவா’ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று, ஓடிக்கொண்டிருக்க, தமிழகத்தில் மட்டும் வெளியாகாமல் விஜய் ரசிகர்களை மட்டுமல்லாது கோலிவுட்டையே அதிர்ச்சி அடைய வைத்தது. ‘தலைவா’ வெளியாகவிருந்த தமிழக திரையரங்கங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல் வந்ததாலேயே படம் ரிலீஸாவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

எது எப்படியோ கோடிக் கண்க்கில் பணம் முதலீடு செய்து, ஆயிரக்கணக்கான மக்களின் உழைப்பில் உருவாகிய ஒரு படைப்பை குறித்த நேரத்தில் ரிலீஸ் செய்யாததால் தயாரிப்பாளர், அதனை வாங்கி வெளியிடுபவர்கள், முன்பணம் கொடுத்திருக்கும் தியேட்டர் அதிபர்கள் என பல நிலைகளிலும் பொருளாதார ரீதியாக பலரும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தை வெளியிட உதவிட வேண்டும் என்று படத்தின் கதாயகன் விஜய் தமிழக முதல் அமைச்சருக்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு கோரிக்கை விடுத்திருக்கிறார்.

தவிர நேற்று படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ ஜெயின் மற்றும் படத்தின் இயக்குனர் ஏ.எல்.விஜய் ஆகியோரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து ‘தலைவா’ படம் வெளியாக உதவிடுமாறு முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அத்துடன் தனக்கு ஏற்பட்ட இந்த நிலை திரையுலகிலுள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையாக எடுத்துக் கொண்டு ‘தலைவா’ படம் வெளியாக உதவி செய்யுமாறு வேதனையுடன் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டுள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருட்டுப்பயலே 2 - நீண்ட நான் பாடல்


;