8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பரதேசி!

8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட பரதேசி!

செய்திகள் 14-Aug-2013 3:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் பாலா இயக்கத்தில் வெளிவந்த படம் ‘பரதேசி’. இந்தப் படத்தில் அதர்வா, வேதிகா, தன்ஷிகா முதலானோர் நடித்திருந்தனர். வெள்ளைக்கார ஆட்சி நடந்த காலத்தில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனுபவித்த வேதனைகளையும், வலிகளையும் அழகாக சித்தரித்து இந்தப் படம் எடுக்கப்பட்டிருந்தது. வணிக ரீதியாக இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை என்றாலும் படைப்பு ரீதியாக இந்தப் படம் பேசப்பட்டது.

அத்துடன் சிறந்த உடை அமைப்புக்கான மத்திய அரசின் தேசிய விருதும் இந்தப் படத்திற்கு கிடைத்தது. அடுத்து இந்தப் படம் லண்டனில் நடைபெறவுள்ள உலகத்திரைப்பட விழாவில் 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு திரையிடப்பட உள்ளது. பல்வேறு நாடுகளை சேர்ந்த ஏராளமான படங்கள் இந்த விழாவில் போட்டி போடவிருக்கிறது. இதில் பாலாவின் ’பரதேசி’ 8 விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டிருப்பது ஒரு தமிழ் படைப்பாளிக்கு கிடைத்திருக்கும் பெரிய அங்கீகாரம்தான்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சதுரங்க வேட்டை 2 மோஷன் போஸ்டர்


;