இஷா தல்வார் இடத்தைப் பிடித்த அபிநயா!

இஷா தல்வார் இடத்தைப் பிடித்த அபிநயா!

செய்திகள் 14-Aug-2013 12:51 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அருண்குமார் அரவிந்த் இயக்கத்தில் ஃபஹத் ஃபாசில் – இஷா தல்வார் ஜோடியாக நடிக்க இருந்த படம் ‘வன் பை டு’. இந்தப் படத்தில் முதலில் நடிக்க ஒப்புக் கொண்ட இஷா தல்வார், தற்போது படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார். அவருக்கு பதிலாக ‘நாடோடிகள்’ படத்தில் நடித்த அபிநயா நடிக்க இருக்கிறார். இந்தப் படத்திலிருந்து விலகிக் கொண்டதற்கான காரணம் குறித்து இஷா தல்வார், ‘‘வேறு படங்களில் பிசியாகி விட்டதால் ஃபஹத் ஃபாசிலுடன் இதில் நடிக்க முடியவில்லை’’ என்று கூறிக்கொண்டுள்ளார்.

ஆனால் உண்மை அதுவல்ல! ‘வன் பை டு’வில் ஃபஹத் ஃபாசிலின் மனைவியாக, ஐந்து வயது குழந்தைக்கு தாயாக நடிக்க வேண்டும் இஷா தல்வார். ஆனால் ஐந்து வயது குழந்தைக்கு தாயாக நடித்தால் தனது இமேஜ் பாதிக்கப்படும் என்று கருதியே இஷா படத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளார். முதலில் படத்தின் கதை சொல்லும்போது இந்த விஷயத்தை இஷாவிடம் சொல்லவில்லையாம் இயக்குனர். அதனால் இந்த முடிவை எடுத்திருக்கிறார் இஷா தல்வார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மீண்டும் ஒரு காதல் கதை - டிரைலர்


;