மழையால் நின்றுபோன ஜில்லா!

மழையால் நின்றுபோன ஜில்லா!

செய்திகள் 14-Aug-2013 11:38 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய்யின் ‘தலைவா’ பட வெளியீடு பிரச்சனை, விஜய் ரசிகர்களை சோர்வடைய வைத்தாலும், படம் விரைவில் வெளியாகி விடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் விஜய் அடுத்து நடிக்கும் ‘ஜில்லா’ படத்தின் படத்தின் படப்பிடிப்பு மூன்று ஷெட்யூல் முடிந்துள்ள நிலையில் நான்காவது கட்ட படப்பிடிப்பு இன்று துவங்குவதாக இருந்தது.

ஆனால் சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் படப்பிடிப்பை தள்ளி வைத்திருப்பதாக ‘ஜித்தன்’ ரமேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் – விஜய் கூட்டணியில் உருவாகி வரும் இந்தப் படத்தை நேசன் இயக்குகிறார் என்பதும், ’சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில ஆர்.பி.சௌதரி பிரம்மாண்டமாக தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;