ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய அவதாரம்!

ஏ.ஆர்.ரஹ்மானின் புதிய அவதாரம்!

செய்திகள் 13-Aug-2013 5:39 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் ஆன்டனி, ஜி.வி.பிரகாஷ்குமாரை தொடர்ந்து ஏ.ஆர்.ரஹ்மானும் படத் தயாரிப்பில் இறங்குகிறார். இசை அமைப்பாளர் விஜய் ஆன்டனி 'நான்' படத்தைத் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வெற்றி கண்டார். அவரைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ் படத் தயாரிப்பில் இறங்கி தற்போது 'மதயானைக் கூட்டம்' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.

இவர்களைத் தொடர்ந்து இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் படங்களை தயாரிக்கும் திட்டத்தோடு ‘ஒய்.எம்.மூவீஸ்’ என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி உள்ளார். ஆனால் இந்த நிறுவனம் சார்பில் முதல் முதலாக ஒரு ஹிந்தி படத்தை தயாரிக்க தான் ரஹ்மான் முடிவு செய்துள்ளார். இவருடன் பிரபல இராஸ் நிறுவனமும் தயாரிப்பில் கை கோர்க்க இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த ஹிந்தி படத்தின் கதை, திரைக்கதையை ஏ.ஆர்.ரஹ்மானே எழுதுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;