ஹன்சிகாவின் வெற்றி ரகசியம் என்ன?

ஹன்சிகாவின் வெற்றி ரகசியம் என்ன?

செய்திகள் 13-Aug-2013 3:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகை ஹன்சிகா மோத்வானியை பொறுத்தவரையில் இந்த வருடம் அவருக்கு அதிர்ஷ்ட ஆண்டாக அமைந்திருக்கிறது. அவர் நடித்த ‘தீயா வேலை செய்யணும் குமாரு’, ‘சிங்கம் 2’ ஆகிய இரு படங்கள் மாபெரும் வெற்றி பெற்றதோடு, வரிசையாக பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்தும் வருகிறார்.

இந்த அதிர்ஷ்டம் - வெற்றி குறித்து அவர் கூறும்போது, ‘’இதை வெறும் அதிர்ஷ்டம் என்று கூற முடியாது. நல்ல கதை, நல்ல தயாரிப்பு நிறுவனம், நல்ல இயக்குனர் என வாய்ப்பு வரும்போது அதை இரண்டு கைகளாலும் வரவேற்கிறேன். இரவு – பகல், வெயில் - மழை என பாராமல் ஆத்மார்த்தமாக உழைக்கிறேன். அதற்கும் மேலாக என் தாயின் அறிவுரைகளும், ஊக்கமும் என் வெற்றிக்கு உதவுகின்றன. இதை எல்லாவற்றையும் விட நான் தத்து எடுத்திருக்கும் குழந்தைகளின் மூலம் கிடைக்கும் ஆசியும் என் வெற்றிக்கு உதவுவதாக நம்புகிறேன்’’ என்றார் தனக்கே உரித்தான ‘குழந்தை’ சிரிப்போடு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;