‘ராஜா ராணி’ எப்போது?

 ‘ராஜா ராணி’ எப்போது?

செய்திகள் 13-Aug-2013 12:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.ஆர்,முருகதாஸின் ‘ஏ.ஆர்.எம். புரொடக்‌ஷன்ஸ்’ மற்றும் ‘ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ’ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள படம் ‘ரஜா ராணி’. அட்லீ இயக்கியுள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் டிரைலரை ஆகஸ்ட் 18-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் இப்போது டிரைலர் மற்றும் பாடல்களை வருகிற 23-ஆம் தேதி மிகபிரம்மாண்டமான விழாவாக நடத்தி வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஆர்யா, நயன்தாரா, நஸ்ரியா நசீம் முதலானோர் நடித்திருக்கும் இப்படத்தை அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;