ரீ-என்ட்ரியாகும் உலக அழகி!

ரீ-என்ட்ரியாகும் உலக அழகி!

செய்திகள் 13-Aug-2013 11:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அபிஷேக் பச்சனை திருமணம் புரிந்துகொண்டு நடிப்பிலிருந்து கொஞ்ச காலம் விலகியிருந்த ஐஸ்வர்யா ராய் மீண்டும் நடிக்க வருகிறார் என்பதுதான் பாலிவுட்டின் தற்போதைய ஹாட் டாப்பிக்! ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க நிறைய பேர் முயற்சி செய்து வந்த நிலையில், சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி வரும் ‘ராம்லீலா’ என்ற படத்தில் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார் ஐஸ்வர்யா பச்சன்! ரன்வீர் சிங், தீபிகா படுகோனே ஜோடியாக நடிக்கும் இந்தப் படத்தில், ஐஸ்வர்யாவின் ஒரு நடனம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதிய பன்சாலி, அது பற்றி ஐஸ்வர்யாவிடம் கூற, அவரும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். ‘ஹம் தில் தே சுகே சன்ம’, ‘தேவதாஸ்’, ‘குஸாரிஸ்’ ஆகிய படங்களில் பன்சாலி இயக்கத்தில் நடித்தவர் ஐஸ்வர்யா என்பதும், பச்சன் குடுபத்தினர் பன்சாலி மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Padmaavath - டிரைலர்


;