டானுக்கெல்லாம் டான் சத்யராஜ்!

டானுக்கெல்லாம் டான் சத்யராஜ்!

செய்திகள் 8-Aug-2013 4:35 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒரு காலத்தில் கதாநாயகனாகக் கலக்கிக் கொண்டிருந்த சத்யராஜ், தற்போது குணச்சித்திர வேடங்களிலும் கொடிகட்டிப் பறக்கிறார். ஹிந்தியில், ஷாருக் கான் - தீபிகா ஆகியோர் நடிப்பில் நாளை வெளிவரவிருக்கும் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில், தமிழ்நாட்டு தாதாவாக நடித்திருக்கிறார். இதில் தீபிகாவிற்கு அப்பாவும் இவரே. அதோடு, விஜய் - விஜய் காம்பினேஷனில் உருவாகியிருக்கும் ‘தலைவா’ படத்தில் மும்பை டான் கேரக்டரில் நடித்திருக்கிறார்.

‘தலைவா’வும் நாளை உலகமெங்கும் வெளியாகும் பட்சத்தில் கிட்டத்தட்ட 5000 திரையரங்குகளுக்கு மேல் சத்யராஜை உலகமெங்கும் கண்டுகளிக்கும் வாய்ப்பு இந்திய ரசிகர்களுக்கு வாய்க்கும். இரண்டு முக்கியமான படங்களில் ‘டான்’ கேரக்டரில் சத்யராஜ் நடித்து, ஒரே நேரத்திலும் அப்படங்கள் வெளியாகவிருப்பது இதுவே முதல்முறை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;