‘தலைவா’ முன்பதிவு தீவிரம்...

‘தலைவா’ முன்பதிவு தீவிரம்...

செய்திகள் 8-Aug-2013 3:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருமா? வராதா? என பட்டிமன்றம் வைக்காத குறையாக ரசிர்களைக் குழப்பிக் கொண்டிருக்கிறது ‘தலைவா’ ரிலீஸ். ஆனால் மலேசியா, துபாய் போன்ற வெளிநாடுகளில் ‘தலைவா’ புக்கிங் தற்போது ஜரூராக நடந்து வருகிறது. இன்று இரவுக் காட்சி எப்படியும் அங்கு வெளியாகிவிடுமாம். இதனால், நாளை முதல் இந்தியாவிலும் தமிழகத்திலும் ‘தலைவா’ நிச்சயம் வெளிவரும் என்ற நம்பிக்கை தற்போது ஏற்பட்டுள்ளது.

தவிர, பிரச்சனை எதுவாக இருந்தாலும், நாளை எப்படியும் ‘தலைவா’ படத்தை ரிலீஸ் செய்துவிட வேண்டும் என்பதற்காக, தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து தேவையான காய்களை நகர்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். தற்போது, அரசுத் தரப்பு அதிகாரிகள் சிலருக்கு படத்தைத் தனியாக திரையிட்டுக் காட்டி வருகிறார்கள்.

இந்தத் திரையிடல் முடிந்ததும், அவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகள் என குறிப்பிடும் காட்சிகளை நீக்கிவிட்டாவது நாளை கண்டிப்பாக படத்தை ரிலீஸ் செய்வது என்பதில் உறுதியாக இருக்கிறார்களாம். இன்னும் சிறிது நேரங்களுக்கெல்லாம் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரலாம் என்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;