தெலுங்கு மொழி கற்கும் சூசா குமார்!

தெலுங்கு மொழி கற்கும் சூசா குமார்!

செய்திகள் 8-Aug-2013 1:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல விளம்பரப் படங்களிலும், ‘எதிர்நீச்சல்’ படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடித்தவருமான சூசா குமார் தற்போது அஜித் நடிக்கும் ‘விநாயகம் பிரதர்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் அஜித் - தமன்னா ஜோடியாக நடிக்க, இன்னொரு ஜோடியாக விதார்த் - சூசா குமார் நடிக்கிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடித்து வரும் சூசா குமாருக்கு, தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

தமிழை தாய் மொழியாக கொண்ட சூசா குமார், தெலுங்கு படங்களில் நடிப்பதற்காக தற்போது தெலுங்கு மொழியை கற்று வருகிறார். இது சம்பந்தமாக அவர் கூறும்போது, ‘’மொழி தெரியாமல் நடிப்பதை விட, மொழி தெரிந்து நடிக்கும்போது அந்த கேரக்டர் மீது ஒரு இன்வால்வ்மென்ட் ஏற்பட்டு. நம்மால் சிறப்பாக நடிக்க முடியும். அதற்காகவே தற்போது தெலுங்கு கற்று வருகிறேன்’’ என்று கூறியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;