நஸ்ரியா - நிவின் கெமிஸ்ட்ரி!

நஸ்ரியா - நிவின் கெமிஸ்ட்ரி!

செய்திகள் 7-Aug-2013 2:41 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நிவின் - நஸ்ரியா இணைந்து கலக்கிய ‘யூவ்’ ஆல்பம் மற்றும் ‘நேரம்’ திரைப்படம் ஆகியவை ஹிட்டானதைத் தொடர்ந்து இந்த ஜோடி ராசியான ஜோடியாகி விட்டது போலும்! இவர்கள் நடிப்பில் மீண்டும் ஒரு மலையாள படம் உருவாகிறது. ‘ஓம் சாந்தி ஓசானா’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஜூட் ஆன்டனி இயக்குகிறார். ரொமாண்டிக் காதல் கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாத கடைசியில் ஆரம்பமாகவுள்ளது.

‘நேரம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து நிவின் மலையாளத்தில் பிசியான நடிகர் என்றால், நஸ்ரியா, ‘திருமணம் என்னும் நிக்காஹ்’, ‘ராஜா ராணி’, ‘நய்யாண்டி’ என பல தமிழ் படங்களில் பிசியாகி நடித்து வருவதோடு, அடுத்த ஆண்டில் ‘நேரம்’ படத்தின் ஹிந்தி ரீ-மேக்கிலும் நடிக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;