யூ-டியூபில் வெளியான ஆரம்பம்!

யூ-டியூபில் வெளியான ஆரம்பம்!

செய்திகள் 7-Aug-2013 10:51 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

அஜித், விஷ்ணுவர்த்தன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘தல’ ரசிகர்களிடத்தில் மட்டுமல்லாமல் கோலிவுட் முழுக்க பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் ஒரு காட்சியில் அஜித் தலைகீழாக தொங்கியவாறு இருக்க, அவரை மூன்று - நான்கு பேர் சேர்ந்து ஆக்ரோஷமாக தாக்குவது மாதிரியான ஒரு வீடியோ காட்சி நேற்று யூ-டியூபில் வெளியாகி பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இதையறிந்த இயக்குனர் விஷணுவர்த்தன் பெரும் அதிர்ச்சி அடைந்து, ‘’இந்த வீடியோ காட்சியை வெளியிட்டவர் யார் என்பதை விரைவில் கண்டு பிடிப்பேன். இதை எங்கள் யூனிட்டிலுள்ள யாரும் செய்திருக்க மாட்டார்கள்’’ என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;