ஹாலிவுட் நிறுவனத்துடன் ‘பீட்சா’ தயாரிப்பாளர்!

ஹாலிவுட் நிறுவனத்துடன் ‘பீட்சா’ தயாரிப்பாளர்!

செய்திகள் 6-Aug-2013 4:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’, என தொடர்ந்து மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த ‘திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் தற்போது ‘பீட்சா’ படத்தின் இரண்டாம் பாகமான ‘தி வில்லா’ படத்தை தயாரித்து வருகிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து ஹாலிவுட் புரொடக்‌ஷன் கம்பெனியான ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவுடன் இணைந்து ‘முண்டாசுப்பட்டி’, ‘வி.சித்திரம்’ ஆகிய படங்களைத் தயாரிக்க இருக்கிறது இந்நிறுவனம்.

இதைப் பற்றி சி.வி.குமார் கூறும்போது, ‘‘பல வருடங்களுக்கு முன் நான் ஹாலிவுட்டிலுள்ள மிகப் பெரிய ஸ்டுடியோ ஒன்றுக்கு சென்று வந்தேன். நான் ஒரு திரைப்படத் தயாரிப்பாளர் ஆக அதுவும் ஒரு காரணம். இன்று ஒரு ஹாலிவுட் புரொடக்‌ஷன் கம்பெனி என் நிறுவனத்துடன் இணைந்து படம் தயாரிக்க முன் வந்திருப்பதை நினைக்கும்போது ரொம்பவும் மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என நெகிழ்ந்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாயவன் - டிரைலர்


;