‘மதகஜராஜா’ எப்போது?

‘மதகஜராஜா’ எப்போது?

செய்திகள் 6-Aug-2013 1:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஜெமினி ஃபிலிம் சர்க்யூட்’ தயாரித்து வரும் படம் ‘மதகஜராஜா’ சுந்தர்.சி இயக்கி வரும் இந்தப் படத்தில் விஷால், அஞ்சலி, வரலட்சுமி முதலானோர் நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்ட நிலையில், படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.

காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டிருக்கும் படமாம் இது. இந்தப் படத்திற்கு விஜய் ஆண்டனி இசை அமைக்கிறார். விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பட்டத்து யானை’. இந்தப் படத்திற்கு பிறகு விஷால் நடிப்பில் வெளிவரவிருக்கிற ’மதகஜராஜா’ செப்டம்பர் 6–ஆம் தேதி ரிலீஸாகிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

முத்தின கத்திரிக்கா - டிரைலர்


;