மாறிய மீரா ஜாஸ்மின்!

மாறிய மீரா ஜாஸ்மின்!

செய்திகள் 6-Aug-2013 11:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நிறைய தமிழ், மலையாள படங்களில் நடித்தவர் மீரா ஜாஸ்மின். கைவசம் நிறைய படங்களை வைத்துக்கொண்டு, பிசியாக நடித்து வந்த இவர் மீது புகார்களுக்கும் பஞ்சமில்லாமல் இருந்தது. அதாவது ஒப்புக்கொண்ட மாதிரி குறித்த நேரத்தில் நடிக்க வருவதில்லை, அப்படி நடிக்க வந்தாலும் படப்பிடிப்பு தளத்தில் பிரச்சனைகள் செய்கிறார் என்று பல புகார்கள் கூறப்படது. இதனால் இவரை தங்களது படங்களில் நடிக்க வைக்க, தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் யோசித்தனர்.

இதனால் தமிழிலாகட்டும், மலையாளத்திலாகட்டும் மீரா ஜாஸ்மினுக்கு பட வாய்ப்புக்கள் குறைந்து விட்டன. தமிழை பொறுத்தவரை மீராவிடம் தற்போது ‘இங்க என்ன சொல்லுது’ என்ற ஒரு படம் மட்டும்தான் இருக்கிறது. மலையாளத்தை பொறுத்தவரையில் சித்திக் இயக்கத்தில் இவர் நடித்த ‘லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன்’ படம் சமீபத்தில் வெளியாகி பரவலாக பேசப்பட, அதை தொடர்ந்து ‘மிழிநீர்த்துள்ளிகள்’ என்ற ஒரு படத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபகாலமாக மீரா ஜாஸ்மின் குறித்து வரும் செய்திகளில், ’மீரா இப்போது ரொம்பவும் மாறிவிட்டார், குறித்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வருகிறார், ஷூட்டிங்கில் ரொம்பவும் ஒத்துழைப்பு தருகிறார், சக கலைஞர்களிடத்திலும் நன்றாக பழகுகிறார், மீண்டும் மீரா ஒரு ரவுண்ட் வருவார்’ போன்ற நல்ல செய்திகள் வந்துகொண்டிருக்கிறது. ஒரு மலையாள திரையுலக பிரபலம் மீரா ஜாஸ்மின் குறித்து, ‘’சிறந்த ஒரு நடிகை மீரா ஜாஸ்மின்! இடையில் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஒரு சில பிரச்சனைகளாலும், அவருக்கு பின்னால் இருந்துகொண்டு சுயநலத்தோடு செயல்பட்ட ஒரு சில தவறான நபர்களாலும்தான் அவர் இப்படி ஆனார், மற்றபடி மீரா ஜாஸ்மின் ரொம்பவும் நல்லவர்’’ என்று சர்டிஃபிகெட் கொடுத்திருக்கிறார்.

எது எப்படியோ மீரா ஜாஸ்மின் நல்ல நடிகைதான். அவர் மீண்டும் தொடர்ந்து நிறைய படங்களில் நடித்தால் நமக்கும் சந்தோஷம்தான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஞ்ஞானி - டிரைலர்


;