விறு விறு ‘விஸ்வரூபம் 2’!

விறு விறு ‘விஸ்வரூபம் 2’!

செய்திகள் 5-Aug-2013 5:15 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம் 2’ படத்தை விரைவில் திரைக்கு கொண்டு வரும் நோக்கத்தோடு படத்தின் வேலைகள் சென்னையில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இது குறித்து கமல்ஹாசன் மலையாள மீடியா ஒன்றுக்கு அளித்த சிறு பேட்டியில், ‘விஸ்வரூபம் 2’ படத்தை ப்ரீக்குவல் படம் என்றும், சீக்குவல் படம் என்றும் சொல்லலாம்.

இந்தப் படத்தில் மேக்-அப்-க்கு தைவான் நாட்டு கலைஞர், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸுக்கு அமெரிக்க தொழில்நுட்ப வல்லுனர் என உலகின் பல நாடுகளிலிருந்து வந்துள்ள சிறந்த கலைஞர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள். இந்த மாத இறுதிக்குள் படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்துவிடும். ‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தில் அந்த பாத்திரம் குறித்து நிறைய கேள்விகள் இருக்கும். அந்த கேள்விகளுக்கெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் விடை கிடைக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.

கமல்ஹாசன் சொன்னதை வைத்து பார்க்கும்போது ‘விஸ்வரூபம் 2’ தீபாவளி அன்றோ அல்லது அதற்கு முன்பாகவோ வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அவள் - டிரைலர்


;