துப்பாக்கி, சிங்கம் 2 வரிசையில் ‘தலைவா’!

துப்பாக்கி, சிங்கம் 2 வரிசையில் ‘தலைவா’!

செய்திகள் 5-Aug-2013 4:06 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில், பெரிய எதிர்பார்ப்போடும், பெரிய பெரிய நடிகர்கள் நடித்தும், பெரிய பட்ஜெட்டிலும் உருவாகி பல படங்கள் பேசப்பட்டதோடு, அப்படங்கள் நீளத்திலும் ‘பெரிய’ என்ற சாதனை படைத்திருந்தது. கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ பெரிய படமாக படமாக்கப்பட்டு, கடைசியில் சென்ஸாரில் அதிக ‘கட்’டுக்கு உட்பட்டு, தியேட்டரில் 2 மணி 27 நிமிடங்கள் ஓடும் படமாக சுருங்கி கொண்டது குறிப்பிடத்தக்கது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி, விஜய் நடித்து ஹிட் ஆன ‘துப்பாக்கி’ திரைப்படம் 2 மணி, 46 நிமிடங்கள் ஓடக்கூடிய பெரிய படமாக அமைந்தது. அது போலவே , சமீபத்தில் ரிலீஸாகி இன்னமும் கல்லா கட்டிக் கொண்டிருக்கும் சூர்யா - ஹரி கூட்டணி அமைத்த ‘சிங்கம் 2’ படம் 2 மணி 45 நிமிடங்கள் ஓடும் படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படங்கள் எல்லாம் பெரிய படங்களாக அமைந்தாலும், இப்படங்களின் விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பால் இரண்டே முக்கால் மணி நேரம் போவது தெரியாமல் படத்தை ரசிக்க வைத்தனர்.

இந்த வரிசையில் விரைவில் ரிலீஸாகவிருக்கிற விஜய்யின் ‘தலைவா’வும் இரண்டே முக்கால் மணி நேரத்துக்கு மேல் ஓடும் படமாக அமைந்திருக்கிறதாம். இந்த படம் ரசிகர்களை எப்படி உட்கார வைக்கும் என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்து விடும்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;