பரத் படம் எப்போது?

பரத் படம் எப்போது?

செய்திகள் 5-Aug-2013 11:55 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் பரத், இயக்குனர் சசி கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ஐந்து ஐந்து ஐந்து' படமும் கோலிவுட்டில் எதிர்பார்ப்பில் இருக்கும் படமாகும். ‘சிக்ஸ் பேக்’ உடம்போடு அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கும் பரத்தும் இந்த படம் மீது ரொம்பவும் நம்பிக்கை வைத்து காத்திருக்க, வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி, அதாவது சுதந்திர தினத்தன்று படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தில் பரத்துடன் மிருத்திகா, எரிகா ஃபெர்னாண்டஸ் மற்றும் பலர் நடித்திருக்க, சைமன் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தை ‘சென்னை சினிமா இந்தியா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்திருக்கிறது.

இதே தினம், சுசீந்திரன் இயக்கத்தில் புதுமுகங்கள் சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ் நடித்துள்ள ‘ஆதலால் காதல் செய்வீர்’ திரைப்படமும் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலே வெள்ளையத் தேவா - டீசர்


;