'தலைவா'வுடன் மோதும் ஷாருக் படம்!

‘தலைவா’வுடன் மோதும் ஷாருக் படம்!

செய்திகள் 5-Aug-2013 11:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால், சத்யராஜ் முதலானோர் நடித்துள்ள ‘தலைவா’ படத்தின் கவுண்ட் டவுன் ஸ்டார்ட் ஆகியுள்ளது. வருகிற 9—ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்போடு ரிலீஸாகவிருக்கும் இப்படம் 2500 பிரிண்டுகள் போடப்பட்டு உலகம் முழுக்க வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் ‘டால்பி அட்மாஸ்’ என்னும் தொழில்நுட்பத்துடன் வெளியாகவிருப்பதும் குறிப்பிடத்தக்க விஷயமாகும். சமீபத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற ‘பாக் மில்கா பாக்’ ஹிந்தி படத்தில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்படி பல சிறப்புக்களுடன் வெளியாகும் விஜய்யின் ’தலைவா’வுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படமும் போட்டி போட வருகிறது. ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சத்யராஜ் முதலானோர் கை கோர்த்துள்ள இப்படமும் பெரிய எதிர்பார்ப்பில் இருக்க, ‘சபாஷ் சரியான போட்டி’ என்று சொல்ல வைக்கும் விதமாக இரு படங்களும் ஒரே தினத்தில் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய்க்கு தமிழகத்தில் மட்டுமல்லாது உலகம் முழுக்க ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுபோலதான் ஷாருக்கானுக்கும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;