ஷாருக்கானுக்கு சேலை கட்டிய தீபிகா படுகோனே!

ஷாருக்கானுக்கு சேலை கட்டிய தீபிகா படுகோனே!

செய்திகள் 3-Aug-2013 1:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஷாருக் கான், தீபிகா படுகோனே ஜோடியாக நடித்துள்ள ’சென்னை எக்ஸ்பிரஸ் ஹிந்தி திரைப்படம் வருகிற 9-ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்தப் படத்தின் விளம்பர புரொமோஷன் சம்பந்தமாக ஷாருக் கான் மற்றும் தீபிகா படுகோனே சென்னை வந்திருந்தனர்.

ஒரு பிரபல நட்சத்திர ஹோட்டலில் இதற்கான விழாவினை ’பாலம் சில்க்ஸ்’ நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த விழாவில் கண்கவர் ஆடை அலங்கார அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அழகிகள் பாலம் சில்க்ஸ் சேலைகளை கட்டி கொண்டு கண்களை கவரும் விதமாக மேடையில் நடந்து வந்தனர். இதனை ஷாருக்கானும் தீபிகாவும் பார்த்து ரசித்தனர். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் நடிகர் ஷாருக் கானும், தீபிகாவும் ஒரு பாடலில் லுங்கி அணிந்து நடனம் செய்திருக்கிறார்கள்.

அதனால் இந்த நிகழ்ச்சியில் ஷாருக், பாலம் சில்க்ஸின் சேலையை லுங்கியாக அணிய ஆசைப்பட்டார். அந்த ஆசையினை நடிகை தீபிகா நிறைவேற்றி வைக்கவும் செய்தார். நிகழ்ச்சி மேடையிலேயே, ஷாருக்கானுக்கு தீபிகா படுகோனே மிக அழகாக சேலையினை லுங்கியாக அணிவித்து விழா அரங்கை கலகலக்க வைத்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;