மறைந்தார் இசை சக்ரவர்த்தி!

மறைந்தார் இசை சக்ரவர்த்தி!

செய்திகள் 3-Aug-2013 11:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பழம்பெரும் இசை அமைப்பாளர் தக்‌ஷிணாமூர்த்தி சாமி சென்னை மயிலாப்பூரிலுள்ள தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 93. இவர் வயது சம்பந்தமான உடல் நலகுறைவால் அவதிபட்டு வந்தார். இந்நிலையில் நேற்று இரவு தூங்கிய நிலையிலேயே அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாமல் தென்னிந்திய சினிமாவில் இசை சக்ரவர்த்தியாக விளங்கியவர் தக்‌ஷிணாமூர்த்தி சாமி. இவர் தமிழ், மலையாளம், ஹிந்தி என பல்லாயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைத்திருக்கிறார். மலையாளத்தில் மட்டும் 125 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். தனது 90-வது வயதிலும் கூட (2008-ல்) ‘மிழிகள் சாக்‌ஷி’ என்ற மலையாள படத்துக்கு நான்கு பாடல்களுக்கு இசை அமைத்து, தான் இசையில் இன்னும் ஒ0ரு புலிதான் என்பதை நிரூப்பித்தவர்.

எல்லோராலும் ‘சாமி’ என்று மரியாதையோடு அழைக்கப்படும் இவர் பிரபல பாடகர் யேசுதாஸ், பாடகிகள் கல்யாணி மேனன், பி.சுசீலா, இசை அமைப்பாளர்கள் இளையராஜா, ஆர்.கே.சேகர் (இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தை) உட்பட பல இசை கலைஞர்களது குருவாக விளங்கியவர். கேரளாவை சேர்ந்த தக்‌ஷிணாமூர்த்தி தீவிர குருவாயூரப்பன் பக்தர் ஆவார். குருவாயூரப்பன் சம்பந்தமான நான்கு படங்களுக்கு இவர் இசை அமைத்திருக்கிறார். இவரது இசையில் அமைந்துள்ள பெரும்பாலான பாடல்கள் காலத்தால் அழியாதவை! மறக்க முடியாதவை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;