மேக்னா ராஜின் தாய்மொழி பாசம்!

மேக்னா ராஜின் தாய்மொழி பாசம்!

செய்திகள் 3-Aug-2013 1:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘நிமிர்ந்து நில்’, ‘கள்ளச் சிரிப்பழகா’ ஆகிய தமிழ் படங்களிலும், ஒரு சில மலையாள படங்களிலும் நடித்து வரும் மேக்னா ராஜ், தற்போது ‘ராஜா ஹுலி’ என்ற கன்னட படத்திலும் நடித்திருக்கிறார். குரு தேஷ்பாண்டே இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் யாஷ், மேக்னா ராஜ் ஜோடியாக நடித்திருக்க, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது டப்பிங் மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. முன்னாள் நடிகர் சுந்தர் ராஜ், நடிகை பிரமீளாவின் மகளான மேக்னா ராஜின் தாய்மொழி கன்னடம். மலையாளம் மற்றும் தமிழில் இரவல் குரலோடு நடிக்கும் மேக்னா ராஜ் தாய்மொழியான கன்னடத்தில் சொந்த குரலிலேயே பேசி நடிக்கிறார். ‘ராஜா ஹுலி’ படத்தின் டப்பிங் வேலைகளில் பிசியாகியிருக்கும் மேக்னா ராஜ், ’’தாய்மொழியில் டப்பிங் பேசுவதே தனி சுகம்’’ என்று கூறியிருக்கிறார். விரைவில் ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தை ‘லக்‌ஷ்மி புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கே.மஞ்சு தயாரித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எந்த நேரத்திலும் - டிரைலர்


;