புதிய பாதையில் ரெண்டாவது படம்!

The second film in a new way!

செய்திகள் 3-Aug-2013 11:05 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் புது மாதிரியான காமெடி பாதையை உருவாக்கிய படம் ‘தமிழ் படம்’. சி.எஸ்.அமுதன் இயக்கிய இந்தப் படத்தைத் தொடர்ந்து நிறைய காமெடி படங்கள் வந்து வெற்றிபெற்றது. ‘தமிழ் படம்’ படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் அடுத்து இயக்கி வரும் படம் ‘ரெண்டாவது படம்’. ’’இந்த படத்தில் இன்னொரு புதிய காமெடி பாதையை போட்டிருக்கிறேன்’’ என்கிறார் இயக்குனர் சி.எஸ்.அமுதன். இதில் விமல், ரிச்சர்ட், அரவிந்த் ஆகாஷ், ரம்யா நம்பீசன், விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருக்க, கௌரவ வேடத்தில் வெங்கட் பிரபு, இனியா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள். விரைவில் ரிலீஸாகவுள்ள இந்தப் படத்தை ‘ஸ்கிரீன் க்ராஃப்ட் என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் சார்பில் தரணி தயாரித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;