மலைகிராம செட்டில் ‘இசை’ பதிவு!

மலைகிராம செட்டில் ‘இசை’ பதிவு!

செய்திகள் 3-Aug-2013 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.ஜே.சூர்யா கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இசை அமைத்து ஹீரோவாகவும் நடித்து இயக்கி வரும் படம் ‘இசை’. வளர்ந்து வரும் ஒரு இசை அமைப்பாளருக்கும், மூத்த ஒரு இசை அமைப்பாளருக்கும் இடையில் நடக்கும் மோதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படம் இது. இந்தப் படத்திற்காக கொடைக்கானலின் மிக உயர்ந்த இடமான பாறைப்பாடி என்ற இடத்தில் ஒரு பெரிய மலை கிராமத்தையே செட் போட்டு உருவாக்கியிருக்கிறார்கள்.

ரோடு வசதி இல்லாத அந்த இடத்திற்கு நடந்து சென்று இவ்வளவு பெரிய செட்டை உருவாக்கியிருப்பது அந்த ஊர் மக்களிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கிட்டத்தட்ட 60 பேர் கொண்ட குழு, 14 நாட்கள் மழையென்றும் பார்க்காமல் இரவு - பகலாக உழைத்து உருவாக்கியுள்ள இந்த செட்டில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்தப் படத்தை ‘ஏ.எஸ்.ஏ.மீடியா’ சார்பில் விக்டர் ராஜபாண்டியன் தயாரிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

எச்சரிக்கை - டிரைலர்


;