‘மரியான்’ இயக்குனரின் அடுத்த படம்?

‘மரியான்’ இயக்குனரின் அடுத்த படம்?

செய்திகள் 2-Aug-2013 4:16 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மரியான்’ திரைப்படம் எதிர்பார்த்தது மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும், பரவலாக பேச வைத்த படம். தனது முதல் தமிழ் படத்தின் மூலமே பெரிய கூட்டணி அமைத்த பரத்பாலா, அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பதுதான் தற்போதைய கேள்வி! இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் பரத்பாலா, ‘மரியான்’ பட புரமோஷனுக்காக கேரளா சென்றிருந்தபோது அங்குள்ள பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார். அப்போது நிருபர்கள் பரத்பாலாவிடம் அடுத்த படம் சமபந்தமான கேள்விகள் கேட்க,

‘‘மலையாளத்தின் பிரபல எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயரோட ஸ்கிரிப்ட்டில் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்பது என்னோட கனவு. அதற்காக சில வருடங்களுக்கு முன் அவரோட திரைக்கதையில் ‘நைன்டீந்த் ஸ்டெப்ஸ்’ என்ற பெயரில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்து அதற்கான வேலைகளிலும் இறங்கினேன். ஆனால், தவிர்க்க முடியாத ஒரு சில காரணங்களால் அந்த புராஜெக்ட்டை அப்போது செய்ய முடியவில்லை.

ஆனால் இப்போது அதற்கான நேரம் வர, அதன் வேலைகளில் இறங்கியிருக்கிறேன்” என்று கூறியதோடு, ‘‘தொடர்ந்து மலையாள படங்களை கவனித்து வருபவன் நான். இளம் நடிகரான ஃபஹத் ஃபாசிலின் ரசிகன் நான்’’ என்றும் கூறி மலையாள திரைப்படங்கள் மீது தனக்கிருக்கும் பற்றையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

கேரளாவின் பாரம்பரிய தற்காப்புக் கலை ‘களரி’. இந்த தற்காப்புக் கலையின் பின்னணியில் சொல்லவிருக்கிற படமாம் ‘நைன்டீந்த் ஸ்டெப்’. களரியை கற்பதற்கு ஜப்பானில் இருந்து கேரளாவுக்கு வரும் ஒரு சாமுராய் இளைஞனின் கதைதான் படமாம். அந்த இளைஞனாக ஜப்பான் நடிகர் தடனோபு அசானோ நடிக்க இருக்கிறாராம்.

கேரளாவுக்கு வரும் அந்த இளைஞனுக்கு களரி சொல்லிக் கொடுக்கும் குருவாக நடிப்பதற்கு கமல்ஹாசன், மம்முட்டி, விக்ரம் ஆகியோரது பெயர்கள் பரிசீலனையில் இருக்கிறதாம். கேரளாவிலுள்ள குட்டநாடு மற்றும் ஹம்பியில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். தமிழில் எடுக்கப்பட்டு மற்ற மொழிகளிலும் டப் செய்து வெளியிடும்படியாக தென்னிந்திய கலைஞர்கள் பலர் இதில் நடிக்க இருக்கிறார்களாம். கிட்டத்தட்ட 120 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானே இசை அமைக்க, ஆஸ்கர் விருதுபெற்ற ரசூல் பூக்குட்டி ஒலிப்பதிவு செய்கிறாராம்.

இந்தப் படத்தின் லொகேஷன் தேர்வுக்காக குட்டநாடு வந்த பரத்பாலாவுக்கு அந்த ஊர் மிகவும் பிடித்துபோக, ‘கைனக்கரி வட்டக்காயல்’ எனும் இடத்தில் 70 சென்ட் நிலத்தை வாங்கி போட்டிருக்கிறாராம். விரைவில் அந்த இடத்தில் ஒரு வீட்டையும் கட்டப்போகிறாராம் ‘மரியானை’ தந்த பரத்பாலா!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;