'இரண்டாம் உலகம்' - பாடல் வெளியீடு

'இரண்டாம் உலகம்’ - பாடல் வெளியீடு

செய்திகள் 2-Aug-2013 10:52 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

செல்வராகவன் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'இரண்டாம் உலகம்' படம் கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருப்பதோடு, படம் எப்போது வெளியாகும் என்று ஆவலாய் காத்திருக்கிரார்கள் ரசிகர்கள். இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா, வருகிற 4-ஆம் தேதி நடைபெறவிருக்கிற நிலையில் படத்தின் இரண்டு பாடல் டிராக்கை இன்று சூரியன் எஃப்.எம். மூலம் வெளியிட்டுள்ளனர்.

சூரியன் எஃப்.எம். அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் படத்தின் கதாநாயகன் ஆர்யா கலந்துக்கொண்டு பேசும்போது, இன்று வெளியாகியிருக்கும் இரண்டு பாடல்களில் ஒரு பாடல் தனுஷ் பாடியது. இந்தப் பாடலை தெலுங்கில், முதலில் நான்கு பேரை பாட வைத்தும் எதிர்பார்த்தது மாதிரி அமையவில்லை.

பிறகு ஐந்தாவது ஒருவரை பட வைத்தபோதுதான் தமிழில் தனுஷ் பாடியிருக்கும் பாடலோடு ஒத்துபோனது’’ என்று கூறியுள்ளார். இந்த படத்தில் ஆர்யாவுடன் அனுஷ்கா ஜோடியாக நடித்திருக்கிறார் என்பதும், ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருக்கிறார் என்பதும் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது வேதாளம் சொல்லும் கதை - டீசர்


;