ரெட் ஜெயன்டின் அடுத்த வெளியீடு!

ரெட் ஜெயன்டின் அடுத்த வெளியீடு!

செய்திகள் 2-Aug-2013 2:13 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தொடர்ந்து தனது ’ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் சார்பாக திரைப்படங்களை தயாரித்தும், விநியோகம் செய்தும் தொடர் வெற்றிகளை கண்டு வரும் உதயநிதி ஸ்டாலின் அடுத்து, ‘ஆதலால் காதல் செய்வீர்’ என்ற படத்தின் விநியோக உரிமையை பெற்றிருக்கிறார்.

புதுமுகங்கள் சந்தோஷ் ரமேஷ், மனிஷா யாதவ் ஜோடியாக நடித்திருக்கும் இந்தப் படத்தை சுசீந்திரன் இயக்கியிருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கும் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை வருகிற ஆகஸ்ட் 15-ஆம் தேதி ரிலீஸ் செய்கிறது ’ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தரமணி - யாரோ உச்சிக்கிளை பாடல் வீடியோ


;