உதயநிதி ஸ்டாலின் - காஜல் அகர்வால் கை கோர்க்கும் படம்!

உதயநிதி ஸ்டாலின் - காஜல் அகர்வால் கை கோர்க்கும் படம்!

செய்திகள் 2-Aug-2013 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆர்யா, நயன்தாரா ஜோடியாக நடித்த, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தில் சந்தானம் பேசும் ‘நண்பேன்டா’ வசனம் கோலிவுட்டில் மட்டுமல்லாமல் பரவலாக எல்லோரிடத்திலும் பிரபலமானது. விரைவில் இந்த ‘நண்பேன்டா’ பெயரில் ஒரு படம் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின், காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, சந்தானம் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தை ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ உட்பட பல படங்களை இயக்கிய எம்.ராஜேஷின் உதவியாளர் ஜெகதீஷ் இயக்குகிறார். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவீஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற பொங்கல் முதல் துவங்கவிருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் தற்போது ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பீச்சாங்கை - டீசர்


;