தவறை உணர்ந்த மம்முட்டியின் மகன்!

தவறை உணர்ந்த மம்முட்டியின் மகன்!

செய்திகள் 1-Aug-2013 3:22 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் மம்முட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான் நடித்து விரைவில் ரிலீஸாகவுள்ள படம் ‘நீலாகாசம் பச்சக்கடல் சுவன்ன பூமி’. இந்தப் படத்தின் விளம்பர புரமோஷன் சம்பந்தமாக சமீபத்தில் கொச்சியில் மோட்டார் பைக் பேரணி ஒன்று நடைபெற்றது. கிட்டத்தட்ட 130 பைக்குகளில் இளைஞர்கள் கொச்சி நகரத்தை வலம் வந்த இந்தப் பேரணியை படத்தின் ஹீரோ துல்கர் சல்மான் தவக்கி வைத்தார்.

அப்போது பைக் ஓட்டிய துல்கர் சல்மான், தலையில் ஹெல்மெட் அணியவில்லை. கேரள மோட்டார் வாகன சட்டப்படி ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்பட்டு, அவர்களுக்கு தண்டனையும். அபராதமும் விதிக்கப்படும்.

இந்த நிலையில் மக்களுக்கு முன் உதாரணமாக விளங்க வேண்டிய ஒரு நடிகர், சட்டத்தை மீறி நடந்துகொண்டதை அறிந்த காவல் துறையினர் துல்கர் சல்மான் மீது குற்றம் சுமத்தப்பட்டு அவரிடமிருந்து அதற்கான அபராதத் தொகையை வசூலித்துக் கொண்டனர். தவறை உணர்ந்த துல்கர் சல்மான், உடனே அபராத தொகையை கட்டிவிட்டு, நடந்த சம்பவத்துக்கு வருத்தமும் தெரிவித்தாராம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூர்யா - மை ட்ரீ சவால் வீடியோ


;