தமிழில் க்வென்டின் டரென்டினோ!

தமிழில் க்வென்டின் டரென்டினோ!

செய்திகள் 1-Aug-2013 11:24 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பிரபல ஹாலிவுட் இயக்குரான க்வென்டின் டரென்டினோவுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை உருவாக்கியுள்ள ‘ஆர்இசட்ஏ’ என்றழைக்கப்படும் ராபர்ட் ஃபிட்ஸ்ஜெரால்டு டிக்ஸ் இயக்கத்தில் 2012ஆம் ஆண்டு வெளிவந்த படம் ‘தி மேன் வித் தி அயன் ஃபிஸ்ட்ஸ்’ திரைப்படம். முழுநீள ஆக்ஷன் திரைப்படமான இதில், ரஸல் குரோ, ‘ஆர்இசட்ஏ’ முக்கியப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். 19ஆம் நூற்றாண்டின் பின்னணியில் படம் நகர்வதுபோல் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படத்தில் ‘குங்ஃபூ’ சண்டைக்காட்சிகள் பிரதானமாக இடம்பெற்றிருக்கும்.

‘ஆர்இசட்ஏ’வும் அவரது இனத்தவர்களும் ஒரு கிராமத்தில அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் நிம்மதியைக் குலைப்பதற்காகவே, திட்டம்போட்டு வேலைசெய்கிறது ஒரு சதிகாரக் கும்பல். அக்கும்பலின் பிடியிலிருந்து தன்னுடைய மக்களை ‘ஆர்இசட்ஏ’ எவ்வாறு காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை. ஆஸ்கர் விருதுபெற்ற ரஸல் குரே, இப்படத்தில் ‘ஜேக் நைஃப்’ என்கிற தோர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆக்ஷன் அனல் பறக்கும் இந்த அதிரடித் திரைப்படத்தில், ‘கிளுகிளு’ப்புக் காட்சிகளுக்கும் பஞ்சமிருக்காது!

இப்படம், தற்போது மீண்டும் இந்தியாவில் ஆங்கிலம் மற்றும் தமிழில் நாளை (2&8&2013) முதல் வெளியாகவிருக்கிறது. தமிழில் ‘இரும்பு கை மாயாவி’ என்ற பெயரில் வெளிவரும் இப்படத்தை ‘ஹன்சா பிக்சர்ஸ்’ நிறுவனம் வெளியிடுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;