லட்சுமி மேனனின் புது பிசினஸ்!

லட்சுமி மேனனின் புது பிசினஸ்!

செய்திகள் 1-Aug-2013 10:58 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பீட்சா’ படத்திற்குப் பிறகு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படம் ‘ஜிகர்தண்டா’. மதுரை பின்னணியில் சொல்லப்படும் சஸ்பென்ஸ் த்ரில்லர் கதையாக உருவாகி வரும் இப்படத்தில் சித்தார்த், லட்சுமி மேனன் ஜோடியாக நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் சுறுசுறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் இட்லி கடை வைத்து இட்லி வியாபாரம் செய்யும் பெண்ணாக நடிக்கிறார் லட்சுமி மேனன். இது குறித்து அவர் கூறும்போது, ‘‘கும்கி படத்தில் சவாலான ஒரு வேடத்தில் நடித்திருந்தேன்.

அதுபோன்று ‘ஜிகர்தண்டா’விலும் மாறுபட்ட ஒரு கேரக்டரில்,அதாவது இட்லி விற்கும் பெண்ணாக நடிக்கிறேன். இதற்காக மதுரையில் இட்லி விற்கும் ஒரு சில கடைகளுக்கு சென்று இட்லி விற்பவர்களின் மேனரிஸங்களை அறிந்து, அது மாதிரி இந்தப் படத்தில் நடித்து வருகிறேன். மதுரை உணவு, மல்லிகை பூ என பல விஷயங்களுக்கு பெயர் பெற்ற ஊர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் நடிப்பதன் மூலம் அதையெல்லாம் நேரில் காணும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. இங்குள்ள மக்களின் பழக்க வழக்கங்களும் எனக்கு ரொம்பவும் பிடித்திருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;