இயக்குனர் சேரனுக்கு அபராதம்!

இயக்குனர் சேரனுக்கு அபராதம்!

செய்திகள் 1-Aug-2013 10:34 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வாகனங்களின் கண்ணாடிகளில் ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’மை ஒட்டக்கூடாது என சில மாதங்களுக்கு முன்பு தமிழக போக்குவரத்து காவல்துறை சட்டம் இயற்றியது. அதன்பிறகு இந்த நடைமுறையை கடுமையாக கண்காணித்தும், செயல்படுத்தியும் வருகிறார்கள். சமீபத்தில் இயக்குனர் சேரன் சென்னை வெங்கட்நாராயணா சாலையில் தன் காரில் பயணம் செய்தபோது, போக்குவரத்து காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரின் கார் கண்ணாடியில் ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’ ஒட்டப்பட்டிருந்ததே இதற்குக் காரணம். பின்னர், சேரனின் காரில் ஒட்டப்பட்டிருந்த ‘சன் கன்ட்ரோல் ஃபிலிம்’மை நீக்கிவிட்டு, அபராதமாக 100 ரூபாயையும் கட்டச் சொல்லியிருக்கிறார்கள். விதிகளுக்குக் கட்டுப்பட்ட இயக்குனர் சேரன், வேறுவழியில்லாமல் அபராதத்தையும் செலுத்திவிட்டு வந்திருக்கிறார்.

ஏற்கனவே, இதே பிரச்சனையில் நடிகர் விவேக்கும் சிக்கி, இதுபோன்ற அனுபவத்தைச் சந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிக்னலிலோ, ரோட்டிலோ தங்கள் அபிமான நடிக, நடிகையர்களைக் கண்டுவிட்டால் அங்கே உடனே கூட்டத்தைக் கூட்டிவிடுவார்கள் ரசிகர்கள். இதன் பொருட்டே, பெரும்பாலான பிரபலங்கள் தங்களின் கார் கண்ணாடிகளில் கறுப்பு கலர் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு பயணம் செய்வதாக தங்கள் தரப்பு நியாயங்களைக் கூறுகிறார்கள் பல பிரபலங்கள். ஆனால், தற்போது செயல்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த போக்குவரத்து நடைமுறையால், நிறைய பிரபலங்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த விஷயத்தில் போக்குவரத்து போலீஸார் சரியான தீர்வை விரைவாக எட்டவேண்டியது அவசியம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;