விக்ரமுக்கு விருது நிச்சயம்! - பி.சி.ஸ்ரீராம்

விக்ரமுக்கு விருது நிச்சயம்! - பி.சி.ஸ்ரீராம்

செய்திகள் 1-Aug-2013 10:35 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

குறிப்பிட்ட படங்களை மட்டும் தேர்வு செய்து, திறம்பட ஒளிப்பதிவு செய்யும் இந்திய ஒளிப்பதிவாளர்களில் பி.சி.ஸ்ரீராம் முக்கியமானவர். இவர் தற்போது, ஷங்கர் இயக்கிவரும் ‘ஐ’ படத்தில் பிஸியாக பணியாற்றி வருகிறார். இந்தப் படத்தில், விக்ரமின் நடிப்பை தன் கேமரா வழியே பார்த்து பிரமித்துப்போன ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், ‘‘முதன் முதலில் ‘மீரா’ படத்தில் பார்த்த விக்ரமை, இப்போது ‘ஐ’ படத்தில் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது.

அவரின் அர்ப்பணிப்புக்கும், நடிப்புக்கும் நிச்சயம் தேசிய விருதுக்கு அவருடைய பெயர் பரிசீலிக்கப்படும்’’ என்று தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஏண்டா தலையில எண்ண வெக்கல - டிரைலர்


;