உண்மைச் சம்பவத்தில் நடிகர் ஆதி!

உண்மைச் சம்பவத்தில் நடிகர் ஆதி!

செய்திகள் 1-Aug-2013 10:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மிருகம்’, ‘ஈரம்’, ‘அரவான்’ படங்கள் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் ஆதி, தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் நடிக்கும் புதிய படம் ‘யாகாவாராயினும் நாகாக்க’. இந்தப் படத்தை ஆதியின் சகோதரர் சத்யபிரபாஷ் இயக்குகிறார். இவர் ‘ஜெயம்’ ராஜா உட்பட பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்து, தற்போது இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

சென்னையில் நடந்த ஒரு நிஜ சம்பவத்தை கதைக்கருவாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தில் ஹிந்தி நடிகர் மிதுன் சக்ரவர்த்தி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதோடு பசுபதியும் ஒரு முக்கியப் பாத்திரத்தில் நடிக்கும் இந்த ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தில் மும்பை அழகி நிக்கி, நாசர், நரேன், ஹரீஷ், கிட்டி, ரிச்சா பலோட் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

பிரசன்னா, பிரவின், ஷாம் ஆகியோர் இசையமைக்க, சண்முகசுந்தரம் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை தயாரிப்பாளர் ரவிராஜா பினிஷெட்டியின் ‘ஆதர்ஷ சித்ராலயா பிரைவேட் லிமிடெட்’ நிறுவனம் தயாரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மரகத நாணயம் - கருப்பாடு பாடல் வீடியோ


;