காதலிக்கிறாரா பரத்?

காதலிக்கிறாரா பரத்?

செய்திகள் 31-Jul-2013 3:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘பாய்ஸ்’ படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி ‘காதல்’, ‘பழனி’, ‘கண்டேன் காதலை’ என பல படங்களில் நடித்தவர் பரத். ‘காஞ்சிவரம்’, ‘மலையன்’, ‘பாலை’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஷம்மு. இந்நிலையில் பரத்தும் ஷம்முவும் ஒருவரையொருவர் தீவிரமாக காதலித்து வந்ததாகவும், இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் பச்சை கொடி காட்ட, விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவிருப்பதாகவும் செய்திகள் வந்தவண்ணமிருக்கின்றன.

ஆனால், இந்த செய்திகளை பரத் தரப்பினர் மறுத்துள்ளனர். இது சம்பந்தமாக பரத்தின் மேனேஜரை தொடர்பு கொண்டு கேட்டபோது, ‘‘பரத் சார் ஷம்முவை திருமணம் செய்யப் போவதாக வரும் செய்திகளில் சிறிதும் உண்மையில்லை. அது தவறான தகவல்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். இருவரும் சேர்ந்து ஜோடியாக நடிக்காதபோத எப்படி இப்படியெல்லாம் வதந்திகளை கிளப்புகிறார்கள் எனத் தெரியவில்லை’’ என்று தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சிம்பா - டீசர்


;