விஸ்வரூபம் எடுத்திருக்கும் ‘களிமண்ணு’ பிரச்சனை!

விஸ்வரூபம் எடுத்திருக்கும் ‘களிமண்ணு’ பிரச்சனை!

செய்திகள் 31-Jul-2013 2:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தற்போதைய மல்லுவுட்டின் ஹாட் டாப்பிக் ஸ்வேதா மேனன் நடித்துள்ள ‘களிமண்ணு’ பட விவகாரம்தான்! இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய காலத்திலிருந்தே பல விவாதங்களும், விமர்சனங்களும் எழுந்த படம் இது. இந்தப் படத்துக்காக இயக்குனர் ப்ளஸ்ஸி நடிகை ஸ்வேதா மேனனின் நிஜ பிரசவத்தை நேரடியாக படம் பிடித்ததும் பெரிய சர்ச்சைக்குள்ளானது. பின்னர், படத்தைப் பார்த்த சென்ஸார் அதிகாரிகள் படத்திற்கு எந்த ‘கட்’டும் கொடுக்காமல் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

இதையொட்டி, படத்தை ரிலீஸ் செய்ய களத்தில் இறங்கிய படக்குழுவினருக்கு, ‘‘ஸ்வேதா மேனனின் பிரசவ காட்சிகளை நீக்கம் செய்யாமலும், படத்தின் கதை சம்பந்தமாக விமர்சனம் எழுப்பியவர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டாமலும் படத்தை ரிலீஸ் செய்ய அனுமதிக்க மாட்டோம்’’ என்று ‘கேரளா ஃபிலிம் எக்ஸிபிட்டர்ஸ் அசோஸியேஷன்’ தலைவர் லிபர்ட்டி பஷீர் நெருக்கடி கொடுக்க, மீண்டும் பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்நிலையில் ‘களிமண்ணு’ படத்துக்கு ஆதரவாக கேரள ஃபிலிம் சேமபர் களத்தில் குதித்திருக்கிறது. ‘களிமண்ணு’ படம் குறித்து ஃபிலிம் சேம்பர் தலைவர் சசிகுமார் மற்றும் செயலாளர் அனில் தாமஸ் வெளிட்டுள்ள அறிக்கையில், ‘‘சென்ஸார் அதிகாரிகள் பார்த்து, சர்டிஃபிகேட் வழங்கப்பட்ட ஒரு படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று கூறுவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

லிபர்ட்டி பஷீர் கூறியிருப்பது அவரது தனிப்பட்ட கருத்தே தவிர, அவரது அமைப்பிலுள்ள எல்லோரது கருத்தும் கிடையாது என்று நினைக்கிறேன். ஒரு படத்தை பொறுத்தவரை அது பொதுமக்களுக்கு மத்தியில் திரையிடுவதற்கு உகந்ததா இல்லையா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் சென்ஸார் போர்டுக்கு மட்டுமே உள்ளது. சென்ஸார் அதிகாரிகளால் அனுமதி வழங்கப்பட்ட ஒரு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பது சட்டப்படி குற்றமாகும்.

‘களிமண்ணு' படத்தை திரையிடுவதற்கான எல்லா உதவிகளையும் கேரள ஃபிலிம் சேம்பர் செய்யும்’’ என்று தெரிவித்துள்ளனர். இவர்களது கருத்துக்கு மலையாள திரைப்பட துறையிலுள்ள மற்ற சில அமைப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் ‘களிமண்ணு’ விரைவில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;