அஜித்தின் ரயில் சண்டை!

அஜித்தின் ரயில் சண்டை!

செய்திகள் 31-Jul-2013 12:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆரம்பம்’ படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து, தற்போது ‘சிறுத்தை’ சிவா படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார் அஜித். 60 சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ள இந்த பெயரிடப்படாத படத்திற்காக இரண்டு பாடல்களின் கம்போசிங்கையும் முடித்துவிட்டார் தேவி ஸ்ரீ பிரசாத். அதோடு இப்பாடலுக்கான படப்பிடிப்பையும் சுவிட்சர்லாந்திற்குச் சென்று சமீபத்தில் படமாக்கிவிட்டு வந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திலும் அஜித், ‘சால்ட் அன்ட் பெப்பர்’ லுக்கிலேயே நடிக்கிறாராம். தற்போது ஒரு ரயில் சண்டைக்காட்சிக்காக ஒரிஸாவிற்குச் சென்றுள்ளார்களாம் ‘அஜித் 54’ படக்குழு. அஜித் மற்றும் அவரது தம்பிகளாக நடிக்கும் விதார்த், பாலா, முனிஷ், சுஹைல் ஆகியோருக்கும் வில்லன் பரேஷ் ராவலுக்கும் இடையே நடக்கும் பயங்கரமான ரயில் சண்டைக்காட்சியை ஆந்திரா & ஒரிஸா பார்டரில் உள்ள ஓரிடத்தில் படமாக்க இருக்கிறார்களாம். தமிழ்நாட்டில், அனுமதி கிடைப்பது கடினம் என்பதால்தான் ஒரிஸாவிற்குச் சென்று படமாக்குகிறார்களாம்.

அடுத்த வருடம் பொங்கலுக்கு வர இருக்கும் இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக தமன்னா நடிக்க, ‘பில்லா’விற்குப் பிறகு மீண்டும் இப்படத்தில் அஜித்துடன் கைகோர்த்திருக்கிறார் சந்தானம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;