விஜய்யின் ’அண்ணா - பார்ன் டு லீடு’

விஜய்யின் ’அண்ணா - பார்ன் டு லீடு’

செய்திகள் 31-Jul-2013 12:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய், அமலா பால், சத்யராஜ் முதலானோர் நடித்து, ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள ‘தலைவா’ படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. ‘ஸ்ரீமிஸ்ரி புரொடக்ஷன்’ நிறுவனம் சார்பில் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தை பார்த்த தணிக்கை குழுவினர், படத்தில் நிறைய வன்முறை காட்சிகள் இருப்பதாகக் கூறி படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க முடிவு செய்தனர்.

ஆனால் இதை ஏற்றுக்கொள்ள மறுத்த படக்குழுவினர் படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க, இதை ஏற்க மறுத்தனர் சென்ஸார் அதிகாரிகள். இந்நிலையில் ‘தலைவா’ படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி வைத்துள்ளனர். படத்தை பார்க்கும் ரிவைசிங் கமிட்டி உறுப்பினர்கள படத்துக்கு என்ன சான்றிதழ் வழங்குவார்கள் என்பது விரைவில் தெரிந்து விடும்.

வருகிற ரமலான் பண்டிகையையொட்டி உலகம் முழுக்க ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள இப்படம், மலையாளத்தில் ‘தலைவா’ என்ற பெயரில் தமிழிலேயே வெளியாக, தெலுங்கில் ’அண்ணா - பார்ன் டு லீடு’ என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியாக இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;